குழந்தைகள் கண்முன்னர் இளம் பெண்ணுக்கு முன்னாள் காதலனால் நடந்த அதிர்ச்சி சம்பவம்! புகைப்படத்துடன் முழு தகவல்

Report Print Raju Raju in அமெரிக்கா
344Shares

அமெரிக்காவில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலியை, காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

லாஸ் ஏஞ்சலிஸ் அருகே உள்ள பாகோய்மா என்ற இடத்தில் தான் இச்சம்பவம் நடந்தது.

அப்பகுதியை சேர்ந்த ரூயிஸ் என்ற இளம்பெண் நேற்று வெளியில் சென்றார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் ரூயிஸின் முன்னாள் காதலன் அந்த வழியாக வந்த போது அவனை அவர் பார்த்தார்.

இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்ள முயன்றார். ஆனால் விரட்டி வந்த ரூயிசின் காதலன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் அவரைச் சரமாரியாகச் சுட்டான்.

தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் முன் சுடப்பட்ட ரூயிஸ் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்