அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் காவல் அதிகாரி ஒருவர் நசுக்கப்பட்ட கொடூரமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது .
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடனின் வெற்றிக்கு காங்கிரஸ் அதிகாரப்பூர்வமான ஒப்புதல் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த புதன்கிழமை அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே வரை சென்று கலவரத்தில் ஈடுபட்டனர்.
அப்பொது, நாடாளுமன்ற கட்டிடத்தையும், ஜன்னல்கள் மற்றும் அங்கிருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், சபைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்திக்கொண்டிருந்த காவல் அதிகாரிகளையும் கடுமையாக தாக்கினர்.
இந்த வரலாறு காணாத அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில், Brian Sicknick எனும் US Capitol காவல் அதிகாரி மரணமடைந்தார். மேலும், ஏராளமான காவல் அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளர்.
போர்க்களமாக காட்சியளித்த இந்த வன்முறை கலவரத்திலிருந்து பல வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
அவற்றில், ஒரு காவல் அதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களால் கதவுகளுக்கு இடையில் வைத்து நசுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது
அந்தக் காவல் அதிகாரி வலி தாங்க முடியாமல் கதறும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
வீடியோ காட்சிகளில், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் அவரது முக கவசங்களை இழுத்து தள்ளுகிறார். வேதனையில் துடித்துக்கொண்டிருந்த அவருக்கு அங்கிருந்த யாராலும் உதவ முடியவில்லை.
அந்த அதிகாரியாலும் கதவுகளுக்கு மத்தியில் இருந்து தன்னை வெளியேற்றிக்கொள்ள முடியவில்லை. இந்த வீடியோ காட்சிகள் இப்போது உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில், அந்த குறிப்பிட் ஆதிகாரியின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.