அமெரிக்க ராணுவத்தில் மிகப்பெரிய பதவியில் நியமிக்கப்பட்ட தமிழர்: 3 நட்சத்திர தளபதி பதவிக்கு சமம்!

Report Print Raju Raju in அமெரிக்கா
9494Shares

அமெரிக்க ராணுவத்தில், தலைமை தகவல் அதிகாரியாக தமிழரான ராஜ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, அமெரிக்க ராணுவத்தில், தலைமை தகவல் அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டது.

இந்த பதவியில் தமிழகத்தை சேர்ந்த ராஜ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ராஜ் ஐயர் அங்குள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் பட்டப்படிப்பை முடித்து அதன் பிறகு பெங்களூருவில் பணி ஆற்றியவர் ஆவார். அதன் பிறகு அவர் மின் பொறியியல் படிப்பில் பி எச் டி ஆய்வை முடித்துள்ளார்.

இவர் அதன் பிறகு அமெரிக்காவுக்குச் சென்று பணியாற்றத் தொடங்கினார். இவர் அமெரிக்க ராணுவ செயலருக்கு ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.

தற்போது ராஜ் ஐயருக்கு கிடைத்துள்ள தலைமை தகவல் அதிகாரி பதவி 3 நட்சத்திர தளபதி பதவிக்கு ஒப்பானதாகும்.

இவருக்குக் கீழே 15000 வீரர்கள் உலகெங்கும் உள்ள 100 நாடுகளில் பணியாற்ற உள்ளனர். இவர் 1600 கோடி டொலர் மதிப்பிலான ராணுவ தளவாட கொள்முதலை மேற்பார்வை செய்ய உள்ளார். இவர் கடந்த 26 வருடங்களாக அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

ராஜ் ஐயர் மனைவி பிருந்தா தகவல் தொழில்நுட்ப சுகாதார தொழில் நிபுணர் ஆவார். இவரும் அமெரிக்க அரசில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்