டிரம்ப் ஆதரவாளர்கள் செய்த அட்டூழியம்! செய்தி சேகரித்த ஊடகத்தினருக்கு நேர்ந்த கதி: சிக்கிய திக் திக் காட்சி

Report Print Basu in அமெரிக்கா
316Shares

அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்தில் நடந்த கலவரும் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினரை டிரம்ப் ஆதரவாளர்கள் விரட்டியத்துள்ளனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் வெற்றிப்பெற்றதை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.

அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டது. இந்த கலவரத்தில் 4 பேர் பலியானதாக வாஷிங்டன் டிசி காவல்துறை அறிவித்துள்ளது.

அதேசமயம், செய்தி சேகரிக்க கேப்பிடல் கட்டடத்திற்கு அருகே கமெரா சாதனங்களுடன் இருந்த ஊடகத்தினரை டிரம்ப் ஆதவாளர்கள் விரட்டியடித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி, கமெரா உட்பட முக்கிய சாதனங்களை அடித்து உடைத்து நாசமாக்கி அட்டூழியம் செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்