அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அராஜகம்... சுட்டுக்கொல்லப்பட்ட ட்ரம்ப் ஆதரவாளரான பெண் இவர்தான்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
279Shares

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் அராஜக செயல்களில் ஈடுபட்டபோது, சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தேர்தலில் தோற்றாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து பிடிவாதம் பிடித்துவரும் ட்ரம்பின் ஆதரவாளர்கள், ஜோ பைடனின் வெற்றி ஆவணப்படுத்தப்படுவதை தடுப்பதற்காக, நேற்று மாலை திடீரென அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்கள்.

பொலிசாருக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மோதல் வெடித்தது.

பொலிசார் பலர் காயமடைந்த நிலையில், நடந்த களேபரத்தில் ஒரு பெண் சுடப்பட்டார். அந்த பெண், San Diegoவைச் சேர்ந்த Ashli Babbit என்று தெரியவந்துள்ளது.

ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான Ashli, முன்னாள் விமானப்படை வீராங்கனை ஆவார். மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்ட Ashli, பல மணி நேரத்திற்குப் பின் உயிரிழந்தார். நடந்த குழப்பத்தில் Ashliயை சுட்டது யார் என்பது தெரியவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்