கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற பெண்ணின் காலில் உருவான கொப்புளங்கள்... பின்னர் தெரியவந்த உண்மை

Report Print Balamanuvelan in அமெரிக்கா
719Shares

கொரோனா தடுப்பூசியை ஆவலுடன் எதிர்பார்த்த உலக மக்களுக்கு தொடர்ந்து எதிர்மறையான செய்திகள் கிடைத்தவண்ணம் உள்ளன.

பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர்களில் நான்கு பேருக்கு முக பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக முதலில் செய்தி வெளியானது.

பின்னர், பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட என் ஹெச் எஸ் ஊழியர்கள் இருவருக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட்டு, அவர்களுக்கு சிகிச்சையளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், டெக்சாசைச் சேர்ந்த தனது முப்பது வயதுகளிலிருக்கும் Patricia Chandler என்ற பெண், பைசர் நிறுவன தடுப்பூசி சோதனையில் ஒரு தன்னார்வலராக பங்கேற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவரது பாதத்தில் மிகப்பெரிய கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் இது குறித்து தனது உறவினரான Rebecca Moore என்பவரிடம் கூறியிருக்கிறார். Patriciaவுக்கு சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்கு வசதியில்லாததால், அவருக்கு உதவுவதற்காக Rebecca பொதுமக்களின் உதவியை கோரி ஒன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்தியும் புகைப்படங்களும் வைரலாக, அதை, தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தடுப்பூசி போட்டால் இப்படித்தான் ஆகும் என பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இந்த விடயம், Patriciaவின் மருத்துவரை மட்டுமல்ல, பைசர் நிறுவனத்தையும் எட்டியுள்ளது.

அப்புறம்தான் கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது. அதாவது, பலர் தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற நிலையில், சிலருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, சிலருக்கு தடுப்பூசி போடப்படாமல் வெறும் உப்பு நீர் மட்டுமே (Saline) ஊசி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. Patriciaவுக்கு கொடுக்கப்பட்டதும் உப்பு நீர் மட்டுமே!

இந்த உண்மை வெளியே தெரியவர, மக்கள் அவரை முட்டாள் என்றும், போதைக்கு அடிமை என்றும் சும்மா நடிக்கிறார் என்றும் ஒன்லைனில் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

தான் கொடுத்த விளம்பரத்தில் தன் தவறை விளக்கியுள்ள Patricia, சிகிச்சைக்காக காத்திருக்கிறார்.

அதாவது, Patriciaவின் பாதத்தில் ஏற்பட்ட கொப்புளங்களுக்கு காரணம் தடுப்பூசி அல்ல, அவருக்கு வேறு ஏதோ பிரச்சினை!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்