அமெரிக்க புதிய ஜனாதிபதி ஜோ பைடன் மகனிடம் தொடங்கியது விசாரணை

Report Print Arbin Arbin in அமெரிக்கா
568Shares

அமெரிக்காவில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி ஜோ பைடனின் மகனிடம் வரி எய்ப்பு தொடர்பாக பெடரல் அளவிலான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஜோ பைடனின் மகனான ஹண்டர் பைடனே வெளியிட்டுள்ளார். மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் தமது சட்டத்தரணிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளை சாதாரணமாக எடுக்கப்போவதில்லை எனவும், கண்டிப்பாக தாம் குற்றமற்றவர் என்பதை இந்த விசாரணையின் முடிவில் தெரியவரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது டற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமது எதிராளியான ஜோ பைடனை அவரது மகன் தொடர்பில் பலமுறை தாக்குதல்களை இலக்காகக் கொண்டிருந்தார்.

2009 முதல் 2017 வரை அமெரிக்க துணை ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்த ஜோ பைடன் மீதும் அவரது மகன் ஹண்டர் மீதும் டிரம்ப் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார்.

உக்ரைன் மற்றும் சீனாவில் ஹண்டருக்கு இருக்கும் தொழில் தொடர்பில் ஜனாதிபதி டிரம்ப் பல சந்தேகங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான தாக்குதல்களை ஒரு பொய் பிரச்சாரமாகவே ஜோ பைடன் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்