மூன்றாவது முறையாக தோன்றியுள்ள மர்மத்தூண்: இம்முறை எங்கு தோன்றியிருக்கிறது தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா
489Shares

கடந்த புதனன்று, அமெரிக்காவிலுள்ள உத்தா பாலைவனத்தில் திடீரென 12 அடி உயர உலோகத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசாங்கம் அதை ரகசியமாக வைக்க முயன்றபோதும், அது குறித்து அறிந்துகொண்ட மக்கள் அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று அந்த மர்மத்தூணை புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

ஆனால், வெள்ளிக்கிழமை அந்த தூண் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தது, அதற்கு பதிலாக, அங்கே ஒரு முக்கோண தகரம் மட்டுமே இருந்தது.

இந்நிலையில், அந்த தூண் மாயமான பரபரப்பு அடங்குவதற்குள், ரோமேனியா நாட்டில் அதே போல் ஒரு உலோக தூண் திடீரென தோன்றியது. அதன் உயரம் 13 அடி.

பின்னர் அவ்விரண்டு தூண்களும் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போது, மூன்றாவதாக அதேபோல் ஒரு உலோகத்தூண் அமெரிக்காவின் Pine Mountain என்ற இடத்தில் தோன்றியுள்ளது. அந்த தூண் துருப்பிடிக்காத இரும்பால் ஆக்கப்பட்டுள்ளது.

10 அடி உயரம், 18 இஞ்ச் அகலம் கொண்ட இந்த தூண் நிலத்தில் புதைந்திருக்கவில்லை. அதை நகர்த்த முடியும். அதன் எடை சுமார் 200 பவுண்டுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது.

இவையெல்லாம் என்ன, எங்கிருந்து வருகின்றன, உண்மையிலேயே ஏலியன்கள்தான் இவற்றை பூமியில் வீசினதா? அல்லது யாராவது வேண்டுமென்றே மக்களை பரபரப்பாக்குவதற்காக இப்படி செய்கிறார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

மேலும் இந்த தூண்கள் தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அது பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் ஆய்வு நடக்கும் இடத்திலும் அமைந்துள்ளது.

யாராவது அப்படி பாதுகாக்கப்பட்ட இடத்தில் ஒரு தூணை அமைக்கவேண்டுமானால், அவர்கள் அரசின் கலாச்சாரத்துறையிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பதால், அந்த தூண் குறித்த விடயம் மர்மமாகவே நீடிக்கிறது.

You May Like This Video

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்