60 ஆண்டுகளுக்குப்பின் மரண தண்டனைக்காக காத்திருக்கும் ஒரே பெண்: மரணத்தை தள்ளிவைத்த கொரோனா

Report Print Balamanuvelan in அமெரிக்கா
502Shares

அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்குப்பின் மரண தண்டனைக்காக காத்திருக்கும் ஒரே பெண்ணின் மரணத்தை கொரோனா தள்ளி வைத்திருக்கிறது.

Lisa Montgomery என்ற அந்த பெண்ணுக்கு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி இண்டியானாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.

அப்படி Lisaவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அமெரிக்க வரலாற்றில், 60 ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் பெண்ணாக அவர் இருந்திருப்பார்.

ஆனால், அவரது சட்டத்தரணிகளான Kelley Henry மற்றும் Amy Harwell ஆகிய இருவரும், Lisa மீது கருணை காட்டக்கோரி கருணை மனு விண்ணப்பிக்க இருந்தனர்.

இந்நிலையில், சட்டத்தரணிகள் இருவருக்கும் கொரோனா தொற்றியுள்ளதால், அவர்களால் கருணை மனு விண்ணப்பிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தானே கருணை மனு விண்ணப்பிக்கும் மன நிலையில் Lisaவும் இல்லை. எனவே, Lisaவின் மரண தண்டனையை ஒத்திவைக்குமாறு அவர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.

ஆகவே, இந்த ஆண்டு இறுதிக்குள் Lisaவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த Lisa யாரென்றால், எட்டு மாத கர்ப்பிணியான Bobbie Jo Stinnett (23) என்ற பெண்ணைக் கழுத்தை நெறித்துகொன்று, கத்தியால் அவரது வயிற்றைக் கிழித்து, குழந்தையை எடுத்த பெண் ஆவார்.

Bobbieயைக் கொன்று, அவரது குழந்தையை திருடி, தனது குழந்தை போல் காட்டிக்கொள்ள முயன்ற Lisa, பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்