பரிதாப நிலையில் ஜோ பைடன்... கோல்ஃப் திடலில் டொனால்டு டிரம்ப்: உச்சம் தொடும் மரண எண்ணிக்கை

Report Print Arbin Arbin in அமெரிக்கா
1087Shares

அமெரிக்காவில் கொரோனா மரண எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எதையும் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, டொனால்டு டிரம்ப் தேர்தலில் தோல்வியை சந்தித்த பின்னர், இதுவரை 11,000 மக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இதுவரை நான்கு முறை ஜனாதிபதி டிரம்ப், தமக்கு மிகவும் பிடித்தமான கோல்ஃப் திடலுக்கு சென்று நேரத்தை செலவிட்டுள்ளார்.

இரண்டு முறை ஊடகங்களை சந்தித்து, தேர்தல் முறைகேடு தொடர்பில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

டுவிட்டர் பக்கத்திலும் பல முறை, தேர்தல் மோசடி என பதிவு செய்துள்ளார். ஆனால் கொரோனாவால் இதுவரை கால் மில்லியன் மக்கள் இறந்த பின்னரும், ஜனாதிபதி டிரம்ப் ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மட்டுமின்றி, புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவும் டிரம்ப் மறுத்து வருகிறார்.

மேலும், அரசாங்கம் வசமிருக்கும் முக்கிய தரவுகளை ஜோ பைடனுக்கு வழங்கவும் டிரம்ப் நிர்வாகம் மறுத்து வருகிறது.

அமெரிக்காவில் தேர்தல் நாளில் மட்டும் புதிதாக 100,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், ஜனாதிபதி டிரம்ப் கொரோனா தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க, புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் தொடர்ந்து ஊடகங்களை சந்திப்பதுடன், கொரோனா தொடர்பில் பொதுமக்களை எச்சரித்தும் வருகிறார்.

கொரோனாவை கட்டுப்படும் நோக்கில் புதிய நிபுணர்கள் குழு ஒன்றை நிறுவியுள்ள ஜோ பைடன்,

ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மெத்தனப்போக்கால் அமெரிக்க மக்கள் பேரிழப்பை சந்திப்பார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்