மறுவாக்கு எண்ணிக்கைக்காக பெருந்தொகை கட்டிய ட்ரம்ப்: விவரங்கள் செய்திக்குள்...

Report Print Balamanuvelan in அமெரிக்கா
650Shares

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், Wisconsin மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கைக்காக, 3 மில்லியன் டொலர்கள் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மறு வாக்கு எண்ணிக்கை ஒன்றும் எளிதானதல்ல, அதை இலவசமாகவும் செய்ய முடியாது.

ஒரு மாகாணம் முழுவதிலும் சேகரிக்கப்பட்ட வாக்குகளுக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டுமானால் அதற்கு 7.9 மில்லியன் டொலர்கள் செலுத்தவேண்டியிருக்கும் ட்ரம்ப்.

இப்போது ட்ரம்ப் செலுத்தியிருக்கும் தொகையைக் கொண்டு Milwaukee மற்றும் Dane தொகுதிகளில் மட்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தலாம்.

அந்த தொகுதிகளில் ஜோ பைடன் 577,455 வாக்குகளைப் பெற்றுள்ளார். 20,608 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் அந்த தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை முறைப்படி பெற்றபின், இன்று அந்த மறுவாக்கு எண்ணிக்கை தொடங்க வாய்ப்புள்ளது.

ஒருவேளை அது சனிக்கிழமை வரை செல்லலாம். ஆனால், அந்த மறுவாக்கு எண்ணிக்கை டிசம்பர் 1ஆம் திகதி முடிவடைந்துவிடும்.

இதற்கு முன் Wisconsin மாகாணத்தில் நடைபெற்றுள்ள மறு வாக்கு எண்ணிக்கைகள் சில மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்தியுள்ளன.

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், Wisconsin மாகாணத்தில் நடத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கையில் ட்ரம்புக்கு கூடுதலாக 131 வாக்குகள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்