கமலா ஹாரிஸ் எங்கே? சில நாட்களாக அமெரிக்காவில் எழுந்த கேள்வி!

Report Print Arbin Arbin in அமெரிக்கா
622Shares

அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ், தேர்தல் வெற்றிக்கு பிறகு ஏற்புரை நிகழ்த்திய பின்னர் என்ன ஆனார் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

கமலா ஹாரிஸ் கடந்த பல நாட்களாக ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பதன் காரணம் என்ன என பொதுமக்கள் தற்போது வினவத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ், இந்த பதவிக்கு மூன்று முக்கிய காரணங்களால் தெரிவாகியுள்ளதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.

முதலாவதாக அவர் பெண் என்ற முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவதாக அவர் கருப்பினத்தவர் என்பதால் தெரிபாகியுள்ளார்.

மூன்றாவதாக, தம்மை அவர் ஆப்பிரிக்க அமெரிக்கர் என மட்டுமே அடையாளப்படுத்த முயன்றாலும், அவர் இந்திய அமெரிக்கர் என்பதாலையே துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளதாக நிபுணர்கள் தரப்பு நம்புகின்றது.

இந்த நிலையில், தேர்தல் தோல்வியை ஏற்க மறுக்கும் ஜனாதிபதி டிரம்பை விடவும், ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் உள்ளார்.

மட்டுமின்றி கடந்த சில நாட்களாக ஜோ பைடன், தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்திப்பதும், அமெரிக்காவில் தமது அரசு கொண்டுவரவிருக்கும் திட்டங்கள் தொடர்பில் பேசி வருகிறார்.

ஆனால், இந்த பரபரப்புக்கு மத்தியில் கமலா ஹாரிஸ் எங்கே என்ற கேள்வியே பலரும் தற்போது முன்வைத்து வருகின்றனர்.

இருப்பினும், இது புதிதல்ல என்கின்றனர் ஒரு தரப்பினர். ஜோ பைடன் துணை ஜனாதிபதியாக தெரிவான 2008-ல், ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசு அமைய, முக்கியமான அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்து பொறுப்புகளை ஒப்படைக்கும் பணியை சுமூகமாக நடத்தி முடித்தார்.

தற்போது கமலா ஹாரிஸ் விடயத்தில், 2008-ல் இருந்தது போன்ற ஒரு சூழல் இல்லை எனவும், கொரோனா பரவலால் சமூக இடைவெளி பேண வேண்டிய சூழல் உள்ளதாகவும்,

இரண்டாவதாக, தேர்தல் முடிவுக்கு வந்து இத்தனை நாளான போதும், இதுவரை பொறுப்புகளை ஒப்படைக்கும் கூட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை எனவும்,

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை டொனால்டு டிரம்ப் ஏற்க மறுப்பதாலையே, முக்கிய கூட்டங்கள் அனைத்தும் தாமதமாவதாகவும்,

மட்டுமின்றி, தற்போதைய துணை ஜனாதிபதி Mike Pence இதுவரை கமலா ஹாரிஸ் தரப்பை தொடர்பு கொள்ளவில்லை என்பது மட்டுமின்றி, வாழ்த்து தெரிவிக்கவும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், 56 வயதான கமலா ஹாரிஸ் வாஷிங்டன் நகரில் உள்ள தமது இரண்டு அறை கொண்ட குடியிருப்பில், எதிர்கால பணிகள் குறித்து திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, ஊடக வெளிச்சத்தில் அவர் இல்லை என்றாலும், சமூக ஊடகங்களில் தமது கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்