அடங்க மறுக்கும் டொனால்டு டிரம்ப்... போர்க்களமாகும் அமெரிக்க தெருக்களும் நகரங்களும்: பதற்றத்தில் மக்கள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
431Shares

ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை இதுவரை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஜனாதிபதி டிரம்பால் அமெரிக்க தெருக்களும் நகரங்களும் போர்க்களமாகும் சூழல் உருவாகியுள்ளது.

தலைநகர் வாஷிங்டனில் திரண்ட பல ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்களால் தெருக்களில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டது.

எதிர்தரப்பினர் டிரம்பின் கொடிகளை தீயிட்டு கொளுத்தியதுடன், ஜனாதிபதி டிரம்பை மோசமான வார்த்தைகளால் திட்டினர்.

தலைநகரில் குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள், தேர்தல் முறைகேடு தொடர்பிலே முழக்கங்கள் எழுப்பினர்.

ஆனால், இதுவரை முக்கியமான எந்த மாகாணங்களிலும், டிரம்ப் தரப்பினரால் ஆதாரங்களை திரட்டவோ, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவோ முடியவில்லை.

டொனால்டு டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி வரும் கருத்துக்களையே, அவரது ஆதரவாளர்களும் தெருக்களில் கூறி வருகின்றனர்.

இதனிடையே பாசிசத்திற்கு எதிரான அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கியதால், தலைநகரின் பல தெருக்களில் மோதல் போக்கு உருவானது.

மேலும், அமெரிக்கா அமெரிக்கா என முழக்கமிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள், இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி எங்களுக்கே என்றனர்.

இதனிடையே உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் நான் வெற்றி பெற்றேன் என்ற ஒற்றை வாசகத்தை பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி டிரம்பின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகள் புஷ், ஒபாமா உள்ளிட்டவர்கள் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளதுடன்,

அமைதியான முறையில் பொறுப்புகளை ஜோ பைடனிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்