கூகிளின் நடவடிக்கையால் மக்கள் காயமடைந்துள்ளனர்! அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

Report Print Karthi in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள அனைத்து பொது தேடுபொறி வினவல்களிலும் கூகிள் கிட்டத்தட்ட 90% மற்றும் மொபைலில் கிட்டத்தட்ட 95% தேடல்களைக் கொண்டுள்ளது, கூகிள் அதன் தேடல் முடிவுகளின் தரத்தில் போட்டியிடவில்லை எனக்கூறி கூகுள் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த ஐந்து நிறுவனங்களின் ஒன்றான கூகிள் மீது “தேடல் மற்றும் தேடல் விளம்பரங்களில் கூகிளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றும், மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் பிறருக்கு பணம் செலுத்துவதன் மூலம் இவ்வாறாக அது வளர்ந்துள்ளதாகவும் கூகிளின் நடவடிக்கைகளால் அமெரிக்கர்கள் காயமடைந்ததாக அமெரிக்க அரசு வழக்கு தொடுத்துள்ளது.

அமெரிக்கா, 1974 AT&T என்கிற பிரிவின் கீழ் வழக்கினை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து கூகிள், தற்போது தொடுக்கப்பட்டுள்ள வழக்கானது பெரும் குறைப்பாடுகளை கொண்டுள்ளது என்றும், மக்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்துத்தான் கூகிளை பயன்படுத்துகிறார்கள் என்றும் மக்களை தாங்கள் எவ்விதத்திலும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.

கூகிள் ஏற்கனவே உள்கட்டமைப்பு, தொழில்நுட்பங்கள் மற்றும் திறமைகளில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. "ஒரு தசாப்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நீங்கள் அசைத்துவிட முடியாது." என லண்டனில் உள்ள மீராபாட் செக்யூரிட்டிஸின் தொழில்நுட்ப ஊடக மற்றும் தொலைத் தொடர்பு ஆராய்ச்சியின் தலைவர் நீல் கேம்ப்ளிங் கூறியுள்ளார்.

இவ்வாறா பெரு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்வதும் இழப்பீடுகளை கோருவதும் அமெரிக்காவுக்கு புதியதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்