தரையில் மோதி வெடித்து தீப்பற்றி எரிந்த விமானம்! பென்டகன் உறுதிப்படுத்திய தகவல்: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான F/A-18E சூப்பர் ஹார்னெட் போர் விமானம் தெற்கு கலிபோர்னியாவில் பயிற்சிகளின் போது தரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் கடற்படை விமான ஆயுத நிலையம் உள்ள சீனா லேக் பகுதியின் புறநகரில் உள்ள நெடுஞ்சாலை 14ல் அருகே போர் விமானம் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை, விமானம் விபத்துக்குள்ளான நேரத்தில் ஆயுதங்களை எடுத்துச் சென்றதா இல்லையா என்பதும் தெரியவில்லை.

இந்த விபத்தில் ஏற்பட்ட வெடிப்பில் விமானம் தீப்பற்றி எரிந்தது , சம்பவயிடத்திற்கு விரைந்த சீனா லேக் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

விமானம் தரையில் மோதுவதற்கு முன் விமானி பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாகவும் விளைவாக பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனா லேக் என்பது அமெரிக்காவின் ரோட் தீவை விட பெரிய நிலப்பரப்பை உள்ளடக்கிய ஒரு பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தளமாகும்.

ஏவுகணைகள் உட்பட பல ஆயுதங்கள் இங்கு சோதனை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

ஜூலை 2019ல் ஏற்பட்ட பெரிய பூகம்பத்தால் இந்த தளம் சேதமடைந்தது, இதன் காரணமாக ஆய்வுக்காக குறித்த தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்