இலங்கைக்கு வருகை தரவிருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்! காரணம் இதுதான்

Report Print Karthi in அமெரிக்கா
422Shares

ஆசியாவில் வளர்ந்து சீனாவின் வரும் செல்வாக்கை எதிர்கொள்ளும் அமெரிக்காவின் முயற்சியாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்த மாதம் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு வருவார் என்று இரு இந்தியப் பெருங்கடல் நாடுகளின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

பாம்பியோ இலங்கை தலைநகர் கொழும்பில் தங்கி பேச்சுவார்த்தையை மேற்கொள்வார் என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஆனால், எது குறித்து விவாதிக்க இருக்கின்றனர் என்பது குறித்த எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.

இதனைத் தொடர்ந்து பாம்பியோ மாலத்தீவுக்கும் பயணிக்க இருக்கிறார். "வருகை திட்டமிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவுடன் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பிரதிநிதிகளின் வருகைகள் அறிவிக்கப்படும்" என்று மாலத்தீவின் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக சீனாவின் தூதர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். வருகையின் போது இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான பொருளாதார உதவிகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த உதவி போன்றவை குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியுறவு மந்திரி சுப்ரமண்யம் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த பாம்பியோ இந்த மாதம் புதுடெல்லிக்கு செல்ல உள்ளதாக கடந்த வாரம் இந்திய அரசாங்க வட்டாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்