அமெரிக்க பொருளாதாரம் குறித்து டிரம்ப் சூளுரை! அனல் பறக்கும் அமெரிக்கத் தேர்தல் களம்

Report Print Karthi in அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் திகதியன்று நடக்க இருக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் அடுத்த ஆண்டில் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் கணித்துள்ளார்.

தற்போது அதிபராக இருக்கும் டிரம்ப் எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு யுக்திகளை கைக்கொண்டு வருகிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடன், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தவறியது,.

இன ரீதியான மோதல்களுக்கு தீர்வுகாண தவறியது என பல்வேறு விமர்சனங்களை டிரம்ப் மீது தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், "அடுத்த ஆண்டு நம் நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய பொருளாதார ஆண்டாக இருக்கும், அதுதான் நடக்கப்போகிறது" என்று டிரம்ப் திங்களன்று அரிசோனாவில் நடந்த தேர்தல் பேரணியில் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 82 லட்சத்தினை கடந்துள்ளது. இதுவரை 2.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தொற்றானது பல்வேறு இளைஞர்களின் வேலையை பறித்துள்ளது. லட்சக்கணக்கானவர் தற்போது வேலையின்றி தவித்து வருகின்றனர்.

ஏறத்தாழ 22 மில்லியன் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. அதில் 11 மில்லியன் மீண்டும் கிடைத்துள்ளது. ஆனால், வேலை வாய்ப்பு போன்ற திட்டங்களுக்கான பட்ஜெட்டில் 3.1 மில்லியன் டாலர் அளவிற்கான பற்றாக்குறை மேலெழுந்துள்ளது.

இந்த நிலையில்தான் டிரம்ப் பல்வேறு வாக்குறுதிகளை முன்மொழிந்து வருகிறார். தொடர்ந்து பொருளாதாரம் சார்ந்த திட்டங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்