ஜனாதிபதி டிரம்பின் கொரோனா சோதனை முடிவுகள் வெளியானது

Report Print Arbin Arbin in அமெரிக்கா
274Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கொரோனாவில் இருந்து பூரணமாக குணமடைந்துவிட்டதாக வெள்ளை மாளிகை முதன்மை மருத்துவர் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த 10 நாட்களுக்கு பிறகு, அவர் கொரோனாவில் இருந்து மீண்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிவிரைவு சோதனை மூலம் பரிசோதனை மேற்கொண்டதில், இது தெரிய வந்துள்ளதாக வெள்ளை மாளிகையின் முதன்மை மருத்துவர் சீன் கான்லே தெரிவித்துள்ளார்.

துரித சோதனை மட்டுமின்றி, சாதாரணமாக கொரோனா சோதனைக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து அளவைகளும் டிரம்புக்கும் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எந்த நாட்களில் டிரம்புக்கு கொரோனா சோதனை முன்னெடுக்கப்பட்டது என்ற தகவலை மருத்துவர் கான்லே வெளியிடவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார பேரணிக்கு ஜனாதிபதி டிரம்ப் புளோரிடா செல்லவிருக்கும் தருணத்தில் குறித்த தகவலை மருத்துவர் கான்லே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்