இளைஞனை சுட்டு கொன்ற அவர் சகோதரியின் 13 வயது காதலன்! நடந்தது என்ன? அதிகாலையில் நடந்த பகீர் சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 20 வயது இளைஞனை அவரின் 13 வயது சகோதரியின் காதலன் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

San Antonio பொலிசார் இது குறித்து கூறுகையில், Rene Ray Rodriguez Jr (20) என்பவர் சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நான்கு முறை சுடப்பட்டார்.

Reneவுக்கு 13 வயதான சகோதரி உள்ளார், அவரின் 13 வயதான காதலன் தான் காலை நேரத்தில் Rene வீட்டுக்கு துப்பாக்கியுடன் வந்துள்ளான்.

பின்னர் Rene-வை சுட்டு கொன்றிருக்கிறான், இந்த சம்பவம் தொடர்பாக Reneவின் சகோதரி மற்றும் காதலனை கைது செய்துள்ளோம்.

அவர்களின் வயதை மனதில் வைத்து பெயர் மற்றும் இன்னபிற விபரங்கள் வெளியிடப்படவில்லை என கூறியுள்ளனர்.

Reneன் தாயார் Michelle Rodriguez கூறுகையில், காலை நேரத்தில் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டவுடன் தான் பதறியடித்து கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்தேன்.

அப்போது என் மகளை காணவில்லை, எனது மகள் மோசமான நபருடன் பழகிவந்தாள்.

அவனுடன் விலகி இரு என அவளிடம் கூறி வந்தேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையில் உயிரிழந்த Reneன் இறுதிச்சடங்கு செலவுக்காக GoFundMe ஓன்லைன் பக்கம் மூலம் நிதி வசூல் செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்