அமெரிக்காவில் 12 வயது மகளிடம் நன்கு தெரிந்த நபர் தவறான முறையில் நடந்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக குற்றவாளியை பொலிசில் சிக்க வைத்துள்ளார்.
Manassas-ஐ சேர்ந்தவர் அகோஸ்டா குயிலின் (40). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் இரவு 11 மணியளவில் 12 வயது சிறுமியுடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சிறுமியை தவறான முறையில் குயிலின் தொட்டிருக்கிறார். இதை நேரடியாக பார்த்த சிறுமியின் தாயார் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இருவரையும் தனித்தனியாக அமர வைத்த அவர் குயிலினுக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் பொலிசுக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் குயிலினை கைது செய்தனர்.
குயிலின் அந்த சிறுமி மற்றும் அவர் தாயாருக்கு நன்கு தெரிந்தவர் என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் அவர்களுக்குள் உள்ள உறவுமுறை குறித்து தகவல் வெளிவரவில்லை.
மேலும் சிறுமியிடம் ஏற்கனவே முன்னர் சில முறை குயிலின் தவறாக நடந்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
ஜாமீனில் வெளியில் வரமுடியாதபடி குயிலின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.