ப்ளோரிடாவில் கடந்த மாதம் 30ஆம் திகதி நான்கு குழந்தைகளின் தாயான பெண் ஒருவர் நள்ளிரவில் திடீரென மாயமானார்.
ப்ளோரிடாவைச் சேர்ந்த Christian அதிகாலையில் எழுந்தபோது அவருடைய மனைவி Tracey Lynn Rieker (44)வீட்டில் இல்லை.
அவரது காரும் இல்லாததால், அவர் எங்கே சென்றிருப்பார் என்பதை அறிவதற்காக அவரை மொபைலில் அழைத்தபோது, Tracey மொபைலையும் பர்ஸையும் வீட்டிலேயே விட்டுச் சென்றிருப்பது தெரியவந்தது.
இப்படி அவர் இதற்குமுன் செய்தது இல்லை என்பதால் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் Christian.
பொலிசார் தீவிரமாக Traceyயை தேடிவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, கிட்டத்தட்ட Tracey காணாமல் போய் 10 நாட்களுக்குப் பிறகு அவரது வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள ஏரி ஒன்றில் அவரது கார் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதற்குள் பெண் ஒருவரின் உடலும் உள்ள நிலையில், அது Tracey என பொலிசார் நம்புகிறார்கள்.
Traceyயின் கார் எப்படி ஏரிக்குள் சென்றது என்பது தொடர்பாக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.