இதில் பங்கேற்கமாட்டேன்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in அமெரிக்கா
663Shares

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனுடன் காணொளி காட்சி விவாதத்தில் பங்கேற்க மாட்டன் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட டிரம்ப், 3 இரவுகள் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையடுத்து வெள்ளை மாளிகை திரும்பினார்.

எனினும், டிரம்ப் கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டாரா என்ற தகவல் வெளிவராமல் இருந்தது. இருப்பினும், தான் நலமாக இருப்பதாகவும், விவாதத்துக்குத் தயார் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், டிரம்புக்கு கொரோன உறுதியானதால், தேர்தல் குறித்த விவாதம் அடுத்த வியாழக்கிழமை காணொளி காட்சி மூலம் நடைபெறும் என்று விவாதத்தின் அமைப்பாளர்கள் அறிவத்தனார்.

இதனையடுத்து, Fox Business Network சேனலில் தொலைபேசி மூலம் டிரம்ப் பேசினார், அப்போது ஜோ பிடனுடன் அவர் மீண்டும் ஒரு முறை விவாதிப்பாரா என்று கேட்ட போது ‘நான் காணொளி விவாதம் செய்யப் போவதில்லை’ என கூறினார்.

கொரோனா வைரஸிலிருந்து மீண்டு வரும் டிரம்ப், ஜனாதிபதி தேர்தல் விவாதங்கள் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட புதிய காணொளி காட்சி விவாதத்தை ஏற்க முடியாது என்றார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்