கருப்பினத்தவர் கழுத்தை காலால் மிதித்து கொலை செய்த அதிகாரிக்கு ஜாமீன்! அவர் கட்டிய பிணைத்தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in அமெரிக்கா
2028Shares

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தில் தொடர்புடைய முக்கிய காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் மினிசபோலி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த மே மாதம் கள்ளரூபாய் நோட்டை மாற்ற முயற்சி நடைபெறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற 4 பொலிசார் சோதனை நடத்த வந்தனர். அப்போது சந்தேகத்தின் பெயரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை பொலிசார் கைது செய்ய முற்பட்டனர்.

அப்போது, ஜார்ஜ் பிளாய்ட் கைதிற்கு ஒத்துழைப்பு தர மறுத்த்தார். இதனால் டேரிக் ஸ்யவின் என்ற பொலிஸ்அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து நெரித்தார்.

இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ஜார்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டும் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையில், ஜார்ஜ் பிளாய்ட் சம்பவம் தொடர்பாக 4 பொலிசார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் தனது முழங்காலால் நெரித்தவரும் பிளாய்ட்டின் மரணத்திற்கு முக்கிய காரணமானவருமான டெரிக் ஸ்யவினுக்கு மினிசபோலி நகர நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியுள்ளது.

இதையடுத்து, டெரிக் நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். டெரிக் 1 மில்லியன் டொலரை பிணைத்தொகையாக கட்டியதையடுத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்