கொரோனாவால் இறந்து விடுவேனா? அதி தீவிர நிலையில் ஜனாதிபதி டிரம்ப் கேட்ட கேள்வி

Report Print Arbin Arbin in அமெரிக்கா
1132Shares

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில், தமது உதவியாளர்களிடம் தாம் இறந்து விடுவேனா என அடிக்கடி கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரொனாவால் பாதிக்கப்பட்டு தற்போது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

லேசான அறிகுறிகளுடன் காணப்பட்ட அவர், பின்னர் காய்யச்சலுடனும் மூச்சுத்திணறலுடனும் அவசர அவசரமாக ஹெலிகொப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது காய்ச்சலில் இருந்து ஜனாதிபதி டிரம்ப் விடுபட்டதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்தாலும்,

அவரது உள் உறுப்புகளின் செயற்பாடு தொடர்பில் உறுதியான தகவல் தெரியவர 48 மணி நேரம் கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, தமது உதவியாளர்களிடம், ஜனாதிபதி டிரம்ப், தாம் இறந்து விடுவேனா என பல முறை கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டொனால்டு டிரம்பின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான Stanley Chera இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனாவுக்கு இலக்காகி மரணமடைந்தார்.

மட்டுமின்றி மருத்துவர்கள் ஜனாதிபதி டிரம்பின் உடல் நிலை தொடர்பில் நம்பிக்கையான தகவல்கள் வெளியிட்டாலும்,

பத்திரிகையாளர்களின் முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டதுடன், அந்த கேள்விகளை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது முன்வைக்கப்படுகிறது.

மேலும், ஜனாதிபதி டிரம்பின் உடல் நிலை கணிசமாக மோசமடைந்துள்ளதாக வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளர் மார்க் மெடோஸ் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி தற்போதைய சூழலில் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது எனவும், அடுத்த 48 மணி நேரம் மிக மிக முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்