அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தற்போதைய நிலை: மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
1640Shares

இராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் ஜனாதிபதி டிரம்ப், காய்ச்சலில் இருந்து விடுபட்டுள்ளதாகவும், ஆனால் அடுத்த 48 மணி நேரம் மிக மிக முக்கியம் என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,

காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ஜனாதிபதி டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப் காய்ச்சலில் இருந்து விடுபட்டுள்ளதாகவும், ஆனால் அவரது உள் உறுப்புகளின் செயல்பாடு தொடர்பில், அடுத்த 48 மணி நேரம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

வயது மற்றும் உடல் பருமன் காரணமாக டிரம்பின் உடல் நிலை சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தால் மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் உள்ளது.

டாக்டர் கான்லி ஜனாதிபதி டிரம்ப் தற்போது செயற்கை சுவாசத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்,

ஆனால் பலமுறை கேள்வி எழுப்பிய போதிலும், அவர் எப்போதாவது செயற்கை சுவாசத்தில் இருந்தாரா என்று கூற மறுத்துவிட்டார்.

இருப்பினும், வெள்ளை மாளிகையில் டிரம்ப் தனிமைப்படுத்தலில் இருந்தபோது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாக பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்