அமெரிக்காவில் மின் ஊழியர் ஒருவர் தவறுதலாக எரிவாயு இணைப்பு ஒன்றை சேதப்படுத்த, ஒரு வீடே வெடித்துச் சிதறிவிட்டது.
Dubuque என்ற இடத்தில் எரிவாயு குழாய் உள்ள இடத்தில் மின் வேலை நடந்துள்ளது. அப்போது, மின் ஊழியர் ஒருவரின் இயந்திரம் ஒன்று எரிவாயுக் குழாயை சேதப்படுத்தியுள்ளது.
அப்போது அந்த எரிவாயுக் குழாய் வெடித்துச் சிதறியதில் வீடே நாசமாகிவிட்டது. வீடு வெடித்துச் சிதறுவதையும் தீப்பற்றி எரிவதையும் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
இந்த விபத்தில் நல்ல வேளையாக யாரும் உயிரிழக்கவில்லை. ஒரு தீயணைப்பு வீரருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பக்கத்து வீடுகளில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.