8 ஆண்டுகளாக சிறுமிக்கு நடந்து வந்த கொடுமை! 46 வயதான நபரின் கோர முகம்... முழு பின்னணி தகவல்

Report Print Raju Raju in அமெரிக்கா
126Shares

அமெரிக்காவில் 14 வயதுக்கு குறைவான சிறுமியை 8 ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்து வந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் சிறையில் தான் இருக்கிறார் என தெரியவந்துள்ளது.

எக்டர் கவுண்டி நீதிமன்ற நீதிபதி கூறுகையில், 46 வயதான Christopher Clay Jackson 14 வயதுக்கும் குறைவான சிறுமியை 8 ஆண்டுகளாக சீரழித்து வந்திருக்கிறார்.

அதாவது 2007ல் இருந்து 2015 வரையில் இந்த கொடுமை நடந்துள்ளது என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் கைது செய்யப்பட்ட Christopher Clay Jackson மீது தொடர்ந்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர் $225,000க்கு ஜாமீன் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும் வெள்ளிக்கிழமை மதியம் வரை Christopher Clay Jackson சிறையில் தான் இருந்திருக்கிறார்.

இந்த தகவல் சிறை நிர்வாகம் மூலம் வெளிவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்