டிரம்புக்கு கொரோனா உறுதியான நிலையில்.. அவர் இறந்துவிடுவார்! பரபரப்பை கிளப்பிய ஒபாமாவின் முன்னாள் பணியாளர்

Report Print Basu in அமெரிக்கா
837Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்புக்கு கொரோனா உறுதியான நிலையில் ஒபாமாவின் முன்னாள் பணியாளர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் டிஜிட்டல் குழு அலுவலகத்தில் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் 2016 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் தேசிய செய்தித் தொடர்பாளராக பணியாற்றியவர் ஜாரா ரஹீம்.

டிரம்புக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியானதை அடுத்து ஜாரா ரஹீம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், கடந்த நான்கு ஆண்டுகளாக இதை ட்வீட் செய்வது எனது தார்மீக அடையாளத்திற்கு எதிரானது, ஆனால் , அவர் இறந்துவிடுவார் என்று நம்புகிறேன் என பதிவிட்ட ரஹீம் உடனே அப்பதிவை நீக்கினார்.

குறித்த பதிவில் நபரின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ஜனாதிபதிக்கு கொரோனா உறுதியானதாக செய்தி வெளியானதை அடுத்து ரஹீம் இவ்வாறு பதிவிட்டதால், அவர் டிரம்பை தான் இறந்துவிடுவார் என தெரிவித்துள்ளார் என பல சமூக ஊடக பயனர்கள் குறிப்பிட்டனர்.

மறைமுகமாக பதிவிட்ட ரஹீமின் செயலை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்