கொரோனா பாதிப்பை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப்! உடல்நிலை குறித்து அவரே கூறிய தகவல்

Report Print Raju Raju in அமெரிக்கா
225Shares

கொரோனா மற்றும் தொடர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கும் நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ந்து காய்ச்சல் இருப்பதால் மேல்சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அதிபர் டிரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது உடல் நிலை குறித்து டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நான் நலமாக இருப்பதாக நினைப்பதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்