நடுவானில் டேங்கர் விமானத்துடன் போர் விமானம் மோதி பயங்கர விபத்து: எரிப்பொருள் நிரப்பும் போது நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் நடுவானில் டேங்கர் விமானத்துடன் போர் விமானம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு சொந்தமான F-35 போர் விமானம் தெற்கு கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளானது என கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய மாலை 4 மணிக்கு நடுவானில் எரிப்பொருள் நிரப்பும் போது F-35 போர் விமானம், எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானமான KC-130 உடன் மோதியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக F-35 செயலிழந்து தெற்கு கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளானது, F-35-யின் விமானி வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என அரிசோனாவின் யூமாவில் உள்ள கடற்படை விமான நிலையமான யூமா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானமான KC-130 வயலுக்கு அருகில் தரையிறங்கியது.

KC-130 விமான நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. KC-130-யின் அனைத்து குழு உறுப்பினர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்