அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம்! ஈவு இரக்கமின்றி பொலிஸ் அதிகாரி செய்த கொடூர செயல்: கொந்தளிக்க வைத்த வீடியோ

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சாலையில் விழுந்த கிடந்த நபரின் தலை மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சைக்கிளை ஏற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக ஊடகங்களை உலுக்கியுள்ளது.

சியாட்டிலில் புதன்கிழமை நடந்த போராட்டங்களின் போது இந்த சம்பவம் நடந்தது.

ப்ரொனா டெய்லர் என்ற கறுப்பினப் பெண்ணின் கொலையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மீத வழக்குத் தொடராமல் விடுவிக்க கென்டக்கி அட்டர்னி ஜெனரல் முடிவெடுத்த பின்னர் சியாட்டிலிலும், மற்ற அமெரிக்க நகரங்களிலும் புதிய போராட்டங்கள் வெடித்தன.

சியாட்டிலில் போராட்டத்தின் போது சாலையில் கிடந்த நபரின் தலையில் வாகனத்தை ஏற்றி பொலிஸ் அதிகாரி நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சியாட் காவல் துறை (SPD) வியாழக்கிழமை அறிவித்தது.

OPA (பொலிஸ் பொறுப்புக்கூறல் அலுவலகம்) இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் திறந்துள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரி நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

OPA-வின் கோரிக்கையைத் தொடர்ந்து, SPD இந்த சம்பவத்தை கிங் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு குற்றவியல் விசாரணைக்கு அனுப்பியுள்ளது என சியாட் பொலிசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் காயமடையவில்லை என்றும் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் எஸ்பிடி பொலிஸ் அதிகாரி கூறினார்.

நகரத்தில் ஆர்ப்பாட்டங்களின் போது 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர், ஆர்ப்பாட்டக்காரர்கள் இப்பகுதியில் ‘வணிகங்களைத் தாக்கினர்’, SPD அதிகாரியில் தலையில் தாக்கினர் என எஸ்பிடி அதிகாரி கூறினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்