கொரோனாவால் 200 மில்லியன் அமெரிக்கர்கள் மரணம்: பரபரப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கொரோனாவால் 200 மில்லியன் அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிடுபவர் ஜோ பிடன்.

நேற்று பிலதெல்பியாவில் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜோ, இந்த பரபரப்புக் கூற்றை முன்வைத்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் 44 நாட்களே இருக்கும் நிலையில், ட்ரம்பும், ஜோ பிடனும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் ட்ரம்ப் ஜனாதிபதியாக தொடருவாரேயானால், நான் என் பேச்சை முடிப்பதற்குள் 200 மில்லியன் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலியாகியிருப்பார்கள் என்றார் ஜோ. அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் பெருகிவந்தாலும், உண்மையில் 200 மில்லியன் அமெரிக்கர்கள் உயிரிழக்கவில்லை.

அதாவது 200,000 அமெரிக்கர்கள் உயிரிழப்பார்கள் என்று கூறுவதற்கு பதிலாக, ஜோ 200 மில்லியன் அமெரிக்கர்கள் என்று கூறிவிட்டார்.

ஜோ பிடன் இப்படி உளறிக்கொட்டுவது இது முதல் முறையல்ல, ஏற்கனவே ஜூன் மாதம் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கொரோனாவால் 120 மில்லியன் அமெரிக்கர்கள் உயிரிழந்ததாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்