தன்னை நோக்கி பாய்ந்த நாயை சுட்ட பொலிசார்... அய்யோ அம்மா என கேட்ட அலறல் சத்தம்: பின்னர் தெரியவந்த அதிரவைத்த உண்மை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில், ஒரு பெண் மயங்கி விழுந்ததாக தகவலறிந்து சோதிப்பதற்காகச் சென்ற பொலிசார் ஒருவர் மீது நாய் ஒன்று பாய்ந்துள்ளது.

டெக்சாசிலுள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த Margarita Jones (30) என்ற பெண் மயங்கி விழுந்ததாக தகவலறிந்து அவரை சோதிப்பதற்காக Ravi Singh (26) என்ற பொலிசார் சென்றுள்ளார்.

Margaritaவிடம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்று கேட்கும்போது, அவரது நாய் ஓடி வந்து Ravi மீது பாய இருந்திருக்கிறது.

ஆவேசமாக குறைத்தபடி நாய் வருவதைக் கண்ட Ravi, அந்த நாய் தன்னை கடித்துக் குதறிவிடும் என்று பயந்து அந்த நாயை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

ஆனால் அவர் துப்பாக்கியால் சுட்டதும், அய்யோ அந்த பொலிசார் என்னை சுட்டுவிட்டார் என ஒரு சத்தம் கேட்க, ஓடி சேன்று பார்த்துள்ளார் Ravi.

அங்கே மார்பில் குண்டடி பாய்ந்து விழுந்து கிடந்திருக்கிறார் Margarita. நாயை சுட்டபோது, நாய் தப்பி ஓடிவிட, அந்த பெண் மீது தவறுதலாக குண்டு பாய்ந்திருக்கிறது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Margarita பின்னர் உயிரிழந்துவிட்டார். Ravi மீது கவனக்குறைவினால் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்ட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனையும், 10,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படும்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், Ravi பொலிஸ் பயிற்சி முடித்து ஒரு மாதமே ஆன நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Raviயின் சட்டத்தரணியான Kathy Lowthorp கூறும்போது, உங்களை ஒரு நாய் தாக்கவரும்போது நீங்கள் பொலிசாக இருந்தாலும் சரி, வேறு என்ன வேலையில் இருந்தாலும் சரி, உங்களைக் காப்பாற்ற என்ன செய்ய முடியுமோ அதைத்தான் நீங்கள் செய்வீர்கள்.

அத்துடன் அந்த பெண் தவறாக இடத்தில் நின்றிருக்கிறார், அத்துடன் நாயையும் கட்டி வைத்திருந்திருக்கவேண்டும் என்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்