அந்த வீட்டுக்கு போகமாட்டேன்... அவர்கள் என்னை தவறாக தொடுகிறார்கள் என்று கதறிய சிறுமி வழக்கில் முக்கிய திருப்பம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தாயின் காதலன் தன்னிடம் தவறாக நடந்துகொள்வதாக கூறி அந்த வீட்டுக்கு போகமாட்டேன் என்று கதறிய சிறுமி வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

டெக்சாசில் வாழும் Michael (41) Kelly (34) தம்பதி, 2015ஆம் ஆண்டு, ஜூலை மாதம் விவாகரத்து செய்தார்கள்.

விவாகரத்துக்குப்பின் குழந்தைகள் யாரிடம் இருப்பது என்பது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக இழுத்துக்கொண்டே வந்தது.

வழக்கு முடிவுக்கு வரும் வரை குழந்தைகள் Sophie (9), Jack (7) மற்றும் Lucas (6) தங்கள் தாய் Kellyயுடன் வசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

Kellyயுடன் அவரது காதலன் வசித்து வரும் நிலையில், Jake என்று அழைக்கப்படும் அந்த நபரும், அவரது நண்பர்களும் தன் பிறப்புறுப்பைத் தொடுவதாகவும், அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறாள் சிறுமி Sophie.

தந்தை வீட்டுக்கு வந்திருக்கும்போது, தன் தந்தையின் தற்போதைய மனைவியான Kourtneyயிடமும் Jake தன்னை தொடுவதாக புகார் கூறியிருகிறாள் Sophie.

அதைத் தொடர்ந்து தனது பிறப்புறுப்பில் வலி இருப்பதாக அவள் கூறியதைத் தொடர்ந்து Sophie மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாள்.

மருத்துவமனையில், அவளுக்கு பாலியல் தொற்று ஏதாகிலும் ஏற்பட்டுள்ளதா என பரிசோதித்த மருத்துவர்கள், Sophieக்கு பாக்டீரியா தொற்றுக்காக சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், தன் தந்தை வீட்டிலிருந்து தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த தன் பாட்டியிடம், தன் தாயின் காதலன் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கூறி கதறியழுதுகொண்டே, நான் வீட்டுக்கு வரமாட்டேன் என Sophie முரண்டு பிடிக்கும் வீடியோ ஒன்று வெளியானது.

அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் Sophieக்கு ஆதரவாக Stand With Sophie என்ற பிரச்சாரம் துவக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்று குழந்தைகளையும் தந்தை Michaelஇன் பொறுப்பில் ஒப்படைக்க நேற்று உத்தரவிட்டார் நீதிபதி.

பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க உற்சாகமாக தயாராகி வருகிறார் Michael. அத்துடன் தீர்ப்பு விவரம் வெளியானதும், குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக Michaelஇன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மாற்றாந்தாய்கள் என்றாலே குழந்தைகளை சரியாக கவனிக்கமாட்டார்கள் என்ற கருத்து உலகம் முழுவதுமே நிலவிவரும் நிலையில், Michaelஇன் இந்நாள் மனைவியும் Sophieயின் மாற்றந்தாயுமான Kourtneyதான் இந்த வழக்கை முக்கியமாக முன்னின்று நடத்தியிருக்கிறார்.

அதுவும் Michaelஐ மணம் முடிக்கும் முன்பாகவே, அவருக்கு ஆலோசனைகள் கூறி, குழந்தைகளை மீட்க வழக்குத் தொடரச் செய்ததும் Kourtneyதான்.

அத்துடன், Michael, Kourtney தம்பதி, வீடு ஒன்றை சொந்தமாக வாங்கவேண்டும் என்பதற்காக சேர்த்து வைத்திருந்த 30,000 டொலர்களையும் குழந்தைகளை மீட்பதற்காக செலவழித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்