அவர்கள் என்னை தவறாக தொடுகிறார்கள்... நான் வீட்டுக்கு போகமாட்டேன்: ஒரு சிறுமியின் குமுறல்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பிரிந்து வாழும் ஒரு தம்பதியின் மகள், தன்னை தன் தாயின் காதலன் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகாரளித்துள்ள நிலையில், சங்கேத வார்த்தைகளில் (Code words) தன் தந்தைக்கு அவள் கடிதம் எழுதியுள்ள விடயம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2015ஆம் ஆண்டு, ஜூலை மாதம் விவாகரத்து செய்தார்கள் டெக்சாசில் வாழும் Michael (41) Kelly (34) தம்பதி.

விவாகரத்துக்குப்பின் குழந்தைகள் யாரிடம் இருப்பது என்பது தொடர்பான வழக்கு இன்னமும் இழுத்துக்கொண்டே இருக்கிறது.

தற்போது குழந்தைகள் Sophie (9), Jack (7) மற்றும் Lucas (6) தங்கள் தாய் Kellyயுடன் இருக்கிறார்கள்.

Kellyயுடன் அவரது காதலன் வசித்து வரும் நிலையில், Jake என்று அழைக்கப்படும் அந்த நபரும் அவரது நண்பர்களும் தன் பிறப்புறுப்பைத் தொடுவதாகவும், அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறாள் சிறுமி Sophie.

தந்தை வீட்டுக்கு வந்திருக்கும்போது, தன் தந்தையின் தற்போதைய மனைவியான Kourtneyயிடமும் Jake தன்னை தொடுவதாக புகார் கூறியிருகிறாள் Sophie.

அதைத் தொடர்ந்து தனது உறுப்பில் வலி இருப்பதாக அவள் கூறியதைத் தொடர்ந்து Sophie மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாள்.

மருத்துவமனையில், அவளுக்கு தொற்று ஏதாகிலும் ஏற்பட்டுள்ளதா என பரிசோதித்த மருத்துவர்கள், Sophieக்கு பாக்டீரியா தொற்றுக்காக சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், தன் தந்தை வீட்டிலிருந்து தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த தன் பாட்டியிடம், தன் தாயின் காதலன் தன்னை துன்புறுத்தல் செய்வதாக கூறி கதறியழுதுகொண்டே, நான் வீட்டுக்கு வரமாட்டேன் என Sophie முரண்டு பிடிக்கும் வீடியோ ஒன்று வெளியானது.

அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் Sophieக்கு ஆதரவாக Stand With Sophie என்ற பிரச்சாரம் துவக்கப்பட்டது.

ஆனாலும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள நீதிபதி, Sophieயை அவளது தாயுடனே அனுப்பிவிட்டார்.

வார இறுதி நாட்களில் வேண்டுமானால், அவளது தந்தை அவளை சந்தித்துக்கொள்ளலாம் என்றும் கூறிவிட்டார் நீதிபதி.

குழந்தைகள் யாரிடம் இருப்பது என்பது தொடர்பான அடுத்த விசாரணை நவம்பர் 4ஆம் திகதி நடக்க இருக்கிறது.

இதற்கிடையில், தனது தந்தைக்கு Sophie எழுதியுள்ள கடிதங்கள் வெளியாகியுள்ளன. வீட்டில் நடப்பவை குறித்து சங்கேத முறையில் தந்தைக்கு தகவல் கொடுப்பதற்காக பல்வேறு சங்கேத வார்த்தைகளை அவள் தன் தந்தைக்கு அனுப்பியிருப்பதை அந்த கடிதங்களில் காணலாம்.

இந்நிலையில், Sophieயின் புகார்கள் தொடர்பாக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்