பேஸ்புக் நிறுவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய வம்சாவளி மென்பொறியாளரின் ராஜினாமா!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பேஸ்புக் நிறுவனம் தனது லாபத்துக்காக இனவெறுப்பை பயன்படுத்திக் கொள்வதாகக் கூறி இந்திய வம்சாவளி மென்பொறியாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ashok Chandwaney (28) என்னும் அந்த மென்பொறியாளர் எழுதியுள்ள 1,300 வார்த்தைகள் கொண்ட அந்த ராஜினாமா கடிதம், பிரபல நாளிதழ் ஒன்றிலேயே பிரசுரிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே தனது லாபத்துக்காக இனவெறுப்பை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு நிறுவனத்தில் இனி என்னால் பணி புரியமுடியாது என்பதால் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார் Ashok.

சமுதாயத்துக்கு நன்மை ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தைவிட, பேஸ்புக்கிற்கு லாப நோக்கமே அதிகம் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தில், இனவெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் நிகழ்வுகளுக்கு பேஸ்புக் ரெஸ்பான்ஸ் செய்யும் விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் அவர்.

சமீபத்தில் ஆயுதம் ஏந்திய போராட்டக்குழு ஒன்றின் நிகழ்வு ஒன்றை நீக்க பேஸ்புக் தவறியதை சுட்டிக்காட்டுகிறார் அவர்.

அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக துப்பாக்கிகளைக் கொண்டு வருமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டிருந்த விடயத்தையும் பேஸ்புக் அனுமதித்திருந்தது.

அத்துடன், அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சாரத்தில் கொடுக்கும் போலியான வாக்குறுதிகளை உண்மை அலசல் செய்யாமலேயே வெளியிடும் பேஸ்புக்கின் கொள்கையையும் அவர் விமர்சித்துள்ளார்.

குறிப்பாக, மியான்மர் இனவெறுப்பு, Kenosha, Wisconsin வன்முறை ஆகிய விடயங்களை தூண்டி விடும் விதத்தில் பேஸ்புக் செயல்பட்டதாக குற்றம் சாட்டுகிறார் Ashok.

இதே போன்ற காரணங்களை முன்வைத்து சமீப காலமாகவே பேஸ்புக் ஊழியர்கள் ராஜினாமா செய்துவரும் நிலையிலும், நாங்கள் இனவெறுப்பைப் பயன்படுத்தி லாபமடைவதில்லை என சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது பேஸ்புக் நிறுவனம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்