அமெரிக்காவில் வெறும் பாதங்கள் மூலம் இளைஞன் ஒருவர் மாதம் லட்சங்களில் பணம் சம்பாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணம் சம்பாதிக்க யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் இணையம் பணம் சம்பாதிப்பதையும் எளிமையாக்கி விட்டது.
முக்கியமாக சமூகவலைதளங்கள் மூலம் பலரும் அதிகளவில் தங்கள் திறமையால் வருமானம் ஈட்டுகிறார்கள்.
இப்படி 35 வயது இளைஞன் தன் பாதங்களை புகைப்படம் எடுத்துப் பகிர்வதால் மாதம் 2.9 லட்சம் சம்பாதிக்கிறார் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா?
ஆம்! அமெரிக்காவின் அரிசோனாவை சேர்ந்த ஜாசன் ஸ்டாம் என்பவர் தன் பாதங்கள் மற்றும் வேறு ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்தவர்களின் கால் பாதங்களையும் புகைப்படம் எடுத்து பகிர்கிறார்.
தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பாதங்களால் நிரப்பியுள்ளார். இதனால் இஸ்டாவில் 49 ஆயிரத்திற்கும் மேலான ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார்.
அதோடு OnlyFans என்ற இணையதளத்திலும் பணம் சம்பாதிக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், என் ரசிகர்களுக்கு பாதங்களின் மீது இனம் புரியாத ஈர்ப்பு உள்ளது. அதேபோல் அவர்கள் எனக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்கு காரணம் இது போன்ற பிரத்யேக பாதங்களை எளிதில் இணையத்தில் காண முடியாது.
என் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியாகப் புரிந்துகொள்ளக் காரணம் எனக்கும் பாதங்கள் மீதான ஈர்ப்பும் காதலும் இருப்பதால்தான். இது தான் மற்ற புகைப்படங்களுக்கும் எனது புகைப்படங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என கூறி ஆச்சரியப்படுத்துகிறார்.