சிறிது சிறிதாக சேமித்த பணத்தில் வீடு வாங்கிய இளம்பெண்... புது வீட்டில் குடிபுகும் நாளில் எமனாக வந்த நபர்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
4644Shares

தான் சிறிது சிறிதாக சேமித்த பணத்தில் சிறிய வீடு ஒன்றை வாங்கிய இளம்பெண் ஒருவர், சரியாக அந்த வீட்டில் குடிபுக இருந்த நாளில் எமனாக வந்து உயிரைப் பறித்துள்ளார் ஒருவர்.

தென் கரோலினாவில் வாழும் Laura Ashley Anderson (21) என்னும் கல்லூரி மாணவி, தனது சேமிப்பில் வாங்கிய புது வீட்டுக்கு தனது வளர்ப்புத் தந்தையான Charles Nicholas Wall (45)உடன் சென்றிருக்கிறார்.

வீட்டுக்கு வந்ததும்தான் Lauraவுக்கு நினைவுக்கு வந்திருக்கிறது, தான் வீட்டுச் சாவியை எடுத்துவரவில்லை என்ற விடயம்.

உடனே தந்தை வீட்டுச் சாவியை எடுத்துவருவதற்காக காரை எடுத்துக்கொண்டு புறப்படும்போது, அவரது காரின் பின்பக்கம் மற்றொரு காரின் பின்பக்கத்தில் மோதியுள்ளது.

அப்போது அந்த காரிலிருந்து இறங்கிய Ty Sheem Ha Sheem Walters III என்ற நபர், கோபத்தில் துப்பாக்கியை எடுத்து தாறுமாறாக சுட்டிருக்கிறார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட Lauraவும் Charlesம் பரிதாபமாக பலியாக, அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார் Walters.

வனப்பகுதி ஒன்றுக்குள் ஓடி மறைந்து கொண்ட Waltersஐ பொலிஸ் சிறப்புப்படையினர் தேடிக்கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

வெறும் இன்சூரன்ஸ் மூலம் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினையை, சற்றும் யோசிக்காமல் பெரிதுபண்ணி, புதிதாக தனது சொந்த வீட்டில் வாழ்வை தொடங்க இருந்த ஒரு பெண்ணின் வாழ்வை நாசமாக்கியிருக்கிறார் Walters.

ஒரே நேரத்தில் இரண்டு அன்பிற்குரியவர்களை இழந்துவிட்டேனே என கதறும் Lauraவின் தாயும் Charlesன் மனைவியுமாகிய Kimberly Wallக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள் அவரது உறவினர்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்