அமெரிக்காவில் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த இந்தியர் மரணம்! வெளியான புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா
339Shares

அமெரிக்காவில் மூன்று குழந்தைகளை காப்பற்ற ஆற்றில் குதித்த இந்தியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஓடும் கிங்ஸ் ஆற்றின் கரையில் கடந்த புதன் கிழமை 8 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென்று அவர்கள் மூவரும் ஆற்று நீரால் இழுத்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கே இருந்த Manjeet Singh சற்றும் யோசிக்காமல் உடனடியாக, ஆற்றில் குதித்தார். இவர் குதிப்பதைப் பார்த்து அங்கிருந்த மற்றவர்களும் ஆற்றின் உள்ளே குதிக்க இரண்டு குழந்தைகளை காப்பாற்றினர்.

அதன் பின் ஒரு பெண் குழந்தை நீருக்கு அடியில் 15 நிமிடங்களுக்கு பின் மீட்கப்பட்டது.

ஆனால் குழந்தைகளை காப்பாற்ற முதல் ஆளாக குதித்த Manjeet Singh எங்கே போனார்? என்ன ஆனார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

இதையடுத்து மீட்பு படையினர் சுமார் 40 நிமிடங்களுக்கு பின் அவரை நீருக்குள் இருந்து வெளியே மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் Gurdaspur மாவட்டத்தை சேர்ந்த Manjeet Singh, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்தார். பிரான்சோ என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் திகதி தான் டிரக் பயிற்சி பள்ளியும் துவக்கினார்.

பயிற்சி முடித்த பின்னர் ஜெட் ஸ்கை செய்வதற்காக கிங்க்ஸ் ஆற்றுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

தனது உயிரை துச்சமென நினைத்து மற்றவர்களை காப்பாற்ற முயற்சித்த உயிரிழந்த அவரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்