கலிஃபோர்னியாவில் உள்ள நகரம் ஒன்று கொரோனா தொற்று சோதனையில் உறுதி செய்யப்படும் குடியிருப்பாளர்களுக்கு 1,250 டொலர் (£ 957) உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த முதன்மை திட்டத்திற்கு நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அலமேடா நகரின் மேற்பார்வையாளர் குழு இந்த திட்டத்திற்காக 10 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இது அப்பகுதியில் உள்ள சுமார் 7,500 பேருக்கு உதவித்தொகை வழங்க உதவும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், வேலைக்கும் செல்ல முடியாத சூழலில் உணவு, வாடகை மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்கு அவர்கள் எவ்வாறு பணம் செலுத்துவார்கள் என்பது குறித்து பல குடியிருப்பாளர்கள் கவலைப்படுவதைக் கண்டறிந்த பின்னர் இந்த முடிவை எடுத்ததாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் மட்டும் 533,000 பேர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதுவரை சிகிச்சை பலனின்றி 9,866 பேர் மரணமடைந்துள்ளனர். அலமேடா நகரில் இதுவரை 12,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 193 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
இந்த 1,250 டொலர் உதவித்தொகையை பெற குடியிருப்பாளர்கள், குறிப்பிட்ட சுகாதார மையத்தில் சோதனைக்கு உட்பட வேண்டும் எனவும்,
வேலையின்மை சலுகைகளைப் பெறுபவர்கள், ஊதியத்துடன் விடுமுறையில் இருப்பவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என அறிவித்துள்ளனர்.