17 வயதுக்கு குறைவான சிறுவனிடம் மோசமாக நடந்து கொண்டார்! கைது செய்யப்பட்டுள்ள 30 வயது இளம்பெண்

Report Print Raju Raju in அமெரிக்கா
268Shares

அமெரிக்காவில் 17 வயதுக்கும் குறைவான சிறுவனிடம் தவறாக நடந்து கொண்ட வழக்கில் 30 வயது இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Texas-ஐ சேர்ந்தவர் Meagan Renae Sims (30). இவருக்கு Meagan Renae Feaker என்ற இன்னொரு பெயரும் உண்டு.

Meagan சிறுவர்களிடம் தவறாக நடந்து கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணையை பொலிசார் மேற்கொண்டனர்.

அதில் 17 வயதுக்கும் குறைவான சிறுவனிடம் மோசமாகவும், தவறாகவும் நடந்து கொண்டார் என தெரியவந்தது.

இதை தொடர்ந்து Meagan-ஐ கைது செய்ய அதிகாரபூர்வமாக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

வாரண்ட்டை தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தற்போது உட் கவுண்டி சிறையில் Meagan அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஜாமீன் தொகையாக $300,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்