இந்தியா, சீனா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்! அமெரிக்க அரசு முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in அமெரிக்கா
120Shares

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க நீக்கியுள்ள நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவ துவங்கிய போது, சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என, மக்களை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டது.

அதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், அமெரிக்கர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள, அந்நாட்டு அரசு தடை விதித்தது.

இதையடுத்து, தற்போது அமெரிக்காவில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு செல்ல, அமெரிக்கர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, அரசு நீக்கியுள்ளது.

இருப்பினும் சீனா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உட்பட, 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறையாததால் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என, அந்நாட்டு சுகாதாரத் துறை, மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்