நண்டு பிடித்துக்கொண்டிருந்த சிறுமி... நெருங்கிய முதலை: மகளைக் காப்பாற்றுவதற்காக தந்தை செய்த அதிரடி செயல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

டெக்சாசிலுள்ள தங்கள் வீட்டின் பின்னால் ஓடும் நீரோடையில் நண்டு, மீன் முதலானவற்றைப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறது ஒரு குடும்பம்.

தந்தை Andrew Grande (40), பிள்ளைகள் Brandalyn Grandeம் அவளது அண்ணனும், அவர்களை கவனித்துக்கொள்ளும் Robin Randolph என்னும் இளம்பெண்ணும் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது திடீரென அவரது கண்களில் முதலை ஒன்று பட்டிருக்கிறது. அந்த முதலை, விளையாடிக்கொண்டிருந்த Brandalynஐ நோக்கி வருவதை கவனித்திருக்கிறார் Andrew.

Brandalynஐ நோக்கி வந்த முதலை, 10 அடி இடைவெளி இருக்கும் இடம் வரை நெருங்கி வந்ததும், சட்டென தண்ணீருக்குள் மூழ்கி இருக்கிறது.

அடுத்து அது கண்டிப்பாக மகளை நோக்கிப் பாயும் என்பதை உணர்ந்த Andrew, Randolphஐ கதவு வழியாக தங்கள் வீட்டு தோட்டத்திற்குள் தள்ளிவிட்டு விட்டு, மகள் Brandalynஐ தூக்கி வேலியைத் தாண்டி வீட்டுக்குள் வீசியிருக்கிறார்.

அந்த முதலை நிச்சயமாக தாக்குமா என்பது எனக்குத் தெரியாது, என்றாலும் என் மகள் விடயத்தில் நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்கிறார் Andrew.

பின்னர், முதலைகளைப் பிடிப்பவர்களை அழைக்க, அரை மணி நேரம் ஆட்டம் காட்டிய அந்த முதலையைப் பிடித்து வன விலங்குகள் காப்பகம் ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளார்கள் அவர்கள்.

11 அடி 7 இஞ்ச் நீளமும், சுமார் 600 பவுண்டுகள் எடையும் கொண்ட அந்த ராட்சத முதலை தண்ணீரிலிருந்து வெளியேறியிருக்கிமானால் வேலியையே நொறுக்கியிருக்கும், அவ்வளவு பெரிய முதலை அது என்கிறார் Andrew.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்