அமெரிக்காவில் அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் நபர் அதே இடத்தில் வசிக்கும் பெண் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
Fairview Heights பகுதியை சேர்ந்தவர் Mark Franklin (35). இவர் அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தார்.
அதே அடுக்குமாடி வீட்டில் தனியாக வசிக்கும் ஒரு பெண் வீட்டுக்குள் சில தினங்களுக்கு முன்னர் பட்டப்பகலில் அத்துமீறி Mark Franklin நுழைந்துள்ளார்.
பின்னர் அப்பெண்ணை படுக்கையறையில் தள்ளி துஷ்பிரயோகம் செய்துள்ளார் Mark Franklin.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் Mark Franklin-ஐ கைது செய்தனர்.
அவர் மீது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது, துஷ்பிரயோகம் செய்தது, சட்டத்தை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட Mark Franklin தற்போது St. Clair கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
$300,000 பணம் செலுத்தினால் அவர் ஜாமீனில் வெளியில் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.