அமெரிக்காவில் கழிப்பறைக்குள் உட்கார்ந்திருந்த முன்னாள் கணவனை சுட்டு கொன்ற மனைவியின் வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேனியல் கிரீன். இவரும் எரிகா சாண்ட்வோல் என்ற இளம்பெண்ணும் கடந்த 2010ஆம் ஆண்டு சந்தித்த நிலையில் நட்பானார்கள்.
இந்த நட்பு பின்னர் காதலாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2012ல் எரிகா கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்தார்.
இதன்பின்னர் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையடுத்து 2015ஆம் ஆண்டு பிரண்டா வேலா என்ற அழகிய இளம்பெண்ணுடன் டேனியலுக்கு காதல் ஏற்பட்டது.
இருவரும் பல இடங்களுக்கு சென்ற நிலையில் அந்த புகைப்படங்களை டேனியல் சமூகவலைதளங்களில் பகிர்ந்தார்.
இதையெல்லாம் பார்த்து எரிகாவுக்கு டேனியல் மீது கோபம் வந்தது, இந்த நிலையில் 2015 பிப்ரவரி மாதம் டேனியல் வீட்டுக்கு எரிகா சென்றார்.
அங்குள்ள சூழலை பார்த்த போது அவரிடம் இருந்த தனது மகனின் நிலை குறித்து எரிகாவுக்கு கவலை வந்தது.
மேலும் சிறார் ஆபாச படங்களையும் டேனியல் வைத்திருந்ததை பார்த்துள்ளார்.
இதெல்லாம் அவர் மீது எரிகாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது, பின்னர் அங்கிருந்த டேனியல் துப்பாக்கியை எரிகா கையில் எடுத்தார்.
அந்த சமயத்தில் டேனியல் கழிப்பறையில் உட்கார்ந்திருந்தார்.
அப்போது எரிகாவை பார்த்த டேனியல் உன்னை கொல்ல போகிறேன் என்றார், பின்னர் டேனியலை எரிகா துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் எரிகாவை பொலிசார் கைது செய்தனர்.
முதலில் தன் மீதான குற்றத்தை மறுத்த அவர் தற்போது ஒப்பு கொண்டுள்ளார், தன்னுடைய கோபத்தால் எரிகாவின் வாழ்க்கையே கேள்விகுறியாகியுள்ளது.
தொடர்ந்து அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது.