அமெரிக்காவின் புதிய சைக்கோ இவன்தான்... பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
171Shares

இளம் தொழிலதிபரை கண்டம் துண்டமாக வெட்டிக்கொன்ற நபர்தான் அமெரிக்காவின் புதிய சைக்கோ என்று கூறியுள்ளனர் பொலிசார்.

இளம் தொழிலதிபர் ஃபஹிம் சாலேவிடம் (33) உதவியாளராக பணிபுரிந்த டைரீஸ் ஹாப்சில் (21), சாலேவை கொலை செய்து கண்டம் துண்டமாக கூறுபோட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்நிலையில், ஹாப்சில்லின் அத்தையான Marjorie Sine (52) என்பவர் தனது உறவினரான ஹாப்சில் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஹாப்சில் தனது உணர்வுகளை எப்போதுமே வெளிக்காட்டியதேயில்லை, எப்போதுமே எதுவுமே நடவாததுபோலவே இருப்பான் என்று கூறியுள்ளார் அவர்.

உண்மைதான், சாலேவை கொன்றுபோட்டுவிட்டு, அமைதியாக எதுவுமே தெரியாததுபோல், அதே ஏரியாவிலேயே தனது தோழியுடன் ஹாப்சில் நடமாடிய காட்சிகள்தான் பாதுகாப்புக் கமெராக்களில் சிக்கியுள்ளதே.

அதுமட்டுமின்றி, சாலேவைக் கொன்றுவிட்டு, அவரது கிரெடிட் கார்டைத் திருடி, அதைக்கொண்டு யாருக்கோ பிறந்த நாளுக்கு பலூன் பொக்கே என பரிசுகள் வாங்கியிருக்கிறான் ஹாப்சில்.

இவன் தான் அமெரிக்காவின் புதிய சைக்கோ என்று கூறியுள்ள பொலிசார் ஒருவர், ஆனல் இவன் ஒரு முட்டாள் என்கிறார்.

இதற்கிடையில் ஹாப்சில்லின் அத்தை, அவனது இளமைப் பருவம் குறித்தும் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஹாப்சில் குழந்தையாக இருக்கும்போதே அவனது தாய் மனநல காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட, அவனை பொறுப்பெடுத்துக்கொண்டுள்ளார் அவனது பாட்டி.

ஆனால், அவனுக்கு 12 வயதாகும்போது பாட்டி இறந்துபோக, அப்போதிலிருந்து அவனை தன் வீட்டில் வைத்து வளர்த்துள்ளார் அவனது அத்தையான Sine.

ஐந்து வருடங்கள் அத்தை வீட்டில் வாழ்ந்த நிலையில், அவரை சற்றும் மதிக்காமல் நடந்துகொண்டதால் நீதிமன்றம் சென்றிருக்கிறார் அத்தை.

17 வயதில் அரசு காப்பகம் சென்று, பின் அரசு அனுமதித்த ஒரு குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளான் ஹாப்சில்.

அப்போதுதான், தான் அவனை கடைசியாக பார்த்ததாக தெரிவித்துள்ள Sine, அவன் கொலை செய்ததாக செய்திகள் வெளியானபோது பொலிசார் தவறுதலாக அவனை கைது செய்துவிட்டார்கள் என்றே எண்ணினாராம்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹாப்சில்லை தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள் பொலிசார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்