அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனியன்று மாலை Flight 422 என்ற பயணிகள் விமானம், Seattle நகரிலிருந்து Chicago நோக்கி புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் அங்கிருந்த இளைஞர் ஒருவர் பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கத் தொடங்கினார்.
”இயேசுவும் கருப்பினத்தரே... இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்” என மிரட்டல் தோணியில் எச்சரித்தார்.
மேலும், “நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்” இல்லையென்றால் “இயேசுவின் பெயரால் இறந்து போங்கள்” எனவும் கூறினார்.
உடனே பயணிகள் பதறிப்போக, பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த இளைஞரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அதற்குள் ஒலிபெருக்கியில், “ நிலைமை கட்டுக்குள் இருக்கிறது, உடனடியாக விமானம் தரையிறக்கப்படும்” என்ற அறிவிப்பு வந்தது.
விமானம் தரையிறங்கியதும் குறித்த இளைஞரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர், அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பயணிகள் அனைவரும் வேறொரு விமானம் மூலம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.