அமெரிக்காவில் கடந்த ஐந்து நாட்களாக தேடப்பட்டு வந்த நடிகை நய ரிவேரா ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கலிபோர்னியாவை சேர்ந்தவர் நய ரிவேரா, இவரை கடந்த புதன்கிழமை முதல் காணவில்லை.
இவரது 4 வயது மகன் மட்டும் கலிபோர்னியாவில் உள்ள ஆற்றின் படகிலிருந்து மீட்கப்பட்டார்.
இதனையடுத்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர், நடிகையை யாரேனும் கடத்திச் சென்றார்களா? முன்பகை ஏதும் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
இந்நிலையில் இன்று ஆற்றிலிருந்து நடிகையின் உடல் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்கொலைக்கான சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை என்றும், யாரும் கடத்திச்செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
நடிகையின் மகனும் படகில் இருந்த நிலையில் நிச்சயம் இது விபத்தாக இருந்திருக்ககூடும் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே அச்சிறுவன், தான் திரும்பி பார்க்கும் போது தன்னுடைய அம்மா மூழ்கிக் கொண்டிருந்ததாக கூறியுள்ளான்.
ஒருவேளை மகனை காப்பாற்றிவிட்டு நய ரிவேரா மூழ்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
எனினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே உண்மை புலப்படும்.