திருமணம் முடிந்து கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த புதுப்பெண்! நடுவழியில் அவர் கண்ட காட்சி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் திருமணம் முடிந்த பின்னர் கணவருடன் மணப்பெண் உடையில் சென்ற இளம்பெண் செய்துள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minnesota-வை சேர்ந்தவர் கால்வின் டெய்லர். இவருக்கும் ரச்சேல் என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

இதன்பின்னர் தம்பதி காரில் சென்று கொண்டிருந்தனர், அப்போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து கால்வின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நாங்கள் சென்று கொண்டிருந்த போது சாலையில் பெண்ணொருவர் விபத்தில் சிக்கியிருந்தார்.

இதை கண்ட ரச்சேல் உடனடியாக காரை நிறுத்த சொன்னதோடு அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை செய்தார், என் மனைவி செவிலியர் ஆவார்.

அந்த சமயத்தில் நான் அவசர உதவி எண்ணுக்கு போன் செய்தேன்.

மருத்துவ குழுவினர் வருவதற்குள் மணப்பெண் உடையில் இருந்த ரச்சேல் சிறப்பான முதலுதவியை செய்து முடித்தார்.

இது போன்ற ஒரு சிறந்த மனைவி எனக்கு கிடைப்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ரச்சேலை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது என கூறினார்.

விபத்தில் காயமடைந்த தமரா என்ற பெண் கூறுகையில், எனது உயிரை காப்பாற்ற ரச்சேல் உதவியாக இருந்தார். அவர் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட தேவதை என கூறியுள்ளார்.

இதனிடையில் ரச்சேலின் செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்