கருப்பினத்தவர் ஜார்ஜ் கொலை வழக்கு... தான் குற்றவாளி அல்ல என வாதிட இருக்கும் பொலிசாரில் ஒருவர்: வெளியான ஆவணம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் மின்னசோட்டாவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், தான் குற்றவாளி அல்ல என வாதிட இருப்பதாக வெளியான ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.

கருப்பினத்தவரான ஜார்ஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக Derek Chauvin (44) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், கொலைக்கு உதவியதாக J Alexander Kueng (26), Tou Thao (34) மற்றும் Thomas Lane (37) என்னும் பொலிசார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான Alexander Kueng, தான் குற்றமற்றவன் என்று வாதிட இருக்கிறார்.

அவர் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், தான் குற்றமற்றவன் என்றும், தற்காப்புக்காகவே தாக்கியதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உடல் பலத்தை பிரயோகித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்